Spotlightசினிமா

ஷர்வின் இயக்கத்தில் டிட்டோ நடிக்கும் மறைமுகம்

ABICKA ARTS சார்பில் ”மறைமுகம்” என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன், திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.

70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும், நிஷித்தா மற்றும் தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

காமெடி நடிகர் பாவா லஷ்மணன் , நந்தா சரவணன், பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் ,பிரியதர்ஷினி தேவி, கண்ணன், அறிமுகம் ஜீவகன் , உமேரா பேகம், குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்

இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடலை எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர்.

ஒளிப்பதிவு விஜய் திருமூலம், இசையமைப்பாளர் வசந்த் செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தை வி ஜீவகன் A P ஷர்வின் இணைந்து தயாரிக்க, இணை தயாரிப்பு உமேரா பேகம் கவனித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து முடிந்தது விரைவில் திரைக்கு வர உள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button