
சிம்புவின் எத்தனை படங்கள் தோல்வியை சந்தித்தாலும் இவரது படங்கள் என்றாலே எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு தான். அந்த வகையில் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் அடுத்த இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
றெக்க படத்தினை இயக்கிய ரத்தின சிவா சிம்புவை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறாராம். கதை சிம்புவிற்கு பிடித்து போக முழுக் கதையையும் ரெடி பண்ண சொல்லிவிட்டாராம்.
விரைவில் படத்தினை குறித்த முழு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Facebook Comments