
ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம், மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் என படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்
இப்படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி இமான்.
இவர்களது கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என படங்களின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் ஹிட்டானது.
இந்நிலையில், இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பிரபலங்கள் இணைகின்றனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இன்னும் சில நட்சத்திரங்கள் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.