Spotlightசினிமா

வசூலில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் “டான்”!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன், பால சரவணன், சிவாங்கி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் ”டான்”.

இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடர்ந்து பாஸிடிவான ரிப்போர்ட் கிடைத்ததால், மக்களிடையே தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நாள் வரையிலும்.

இந்நிலையில், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சிவகார்த்திகேயன் படங்களில் இதுநாள் வரை கிடைக்காத வரவேற்பும் வசூலும் டான் படத்தில் கிடைத்திருக்கிறது.

படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button