Spotlightசினிமா

”சீமராஜா மினி கரோக்கி பூத்” … ஆர் டி ராஜாவின் வியூகம்!

24 A M ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்க பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது “சீமராஜா”. சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், லால், சிம்ரன், மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்க , டி இமான் இசை அமைப்பில், பொன் ராம் இயக்கத்தில், உருவாகும் இந்த ஜனரஞ்சகமான படைப்பு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளி வர உள்ளது.

இந்த படத்தின் விளம்பர பணிகளும் மிக பிரமாண்டமாக துவங்கி உள்ளது. அந்த வகையில் “கரோக்கி பூத்” என்ற விளம்பர யுத்தியை கையாள உள்ளனர் படக் குழுவினர். திரை அரங்குகளில் அமைக்க பட்டு இருக்கும் பிரத்தியேக பூத்துகளில் “சீம ராஜா” படத்தின் பாடல்கள், lyric video எனப்படும் பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு dubsmash செய்யலாம். இது யூ tube இல் பதிவு செய்து வெளியிடப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் வாய்ப்பு கிட்டும்.
” இதற்கு “Sing along with சீமராஜா” என பெயரிட்டு இருக்கிறோம். விளம்பரங்கள் பொதுப்படையாக இருந்து விடக் கூடாது. தனி ஒரு ரசிகனை சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்தில் ஒரு ரசிகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம்.அதை நோக்கி எங்கள் முதல் படிதான் இந்த “கரோக்கி பூத்”. நான் அறிந்த வரை இதுதான் தென்னிந்தியாவில் முதல் முறையாகும்.பெரியவர்கள், குழந்தைகள் என்று இருவருக்கும் தனித்தனியே பூத்துகள் அமைத்து இருக்கிறோம்.

குழந்தைகள் பூத்துக்கு “சீமராஜா மினி கரோக்கி பூத்” என பெயரிட்டு இருக்கிறோம். மியூசிக் ட்ராக், lyric video, தவிர படத்தின் டீஸர் கூட இங்கு இருக்கும்.பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் பாட்டு பாடலாம், அல்லது டீசருக்கு ஏற்றவாறு dubsmash செய்யலாம். இந்த வீடியோ யூ tube இல் பதிவு செய்யப்படும்.இதில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து ,இசை அமைப்பாளர் டி இமானுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.

ஆரம்ப முயற்சியாக இன்று 25 ஆம் தேதி , மாலை 5 மணிக்கு, இசை அமைப்பாளர் டி இமான், இயக்குனர் பொன்ராம், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் சென்னை வடபழனி forum hall இல் உள்ள, palazzo திரை அரங்கு வளாகத்தில் எங்கள் முதல் கரோக்கி பூத்தை அமைக்க உள்ளோம். பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்று சிவகார்திகேயனின் ரசிகர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு “கரோக்கி ஸ்டார்” ஆகலாம்.உங்கள் எதிகாலம் உங்கள் குரலில் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆர் டி ராஜா.

Facebook Comments

Related Articles

Back to top button