சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினைட் தயாரிக்கவிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் 16 வது படமான இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள் . “துப்பறிவாளன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் . இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான “கனா” படத்தில் கதாநாயகியாக நடித்த “ஐஸ்வர்யா ராஜேஷ்” இந்த படத்தில் நடிக்கிறார் .
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் இசை அமைக்கிறார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் .
இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார் ,கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொள்கிறார்.
மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக தொடங்கியது !
நடிகர்கள் :
சிவகார்த்திகேயன் , ,ஐஸ்வர்யா ராஜேஷ் , அனு இம்மானுவேல் ,பாரதிராஜா , சமுத்திரக்கனி
நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்
இசை : D .இமான்
ஒளிப்பதிவு :நிரவ் ஷா
கலை இயக்கம் :வீர சமர்
படத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது