Spotlightசினிமா

பிரேம்ஜி’யின் ”Smooth Play Boy- தப்பாக நினைக்காத”

மிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமையோடு இயங்கி வருபவர் பிரேம்ஜி அமரன் ஆவார். சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, தி கோட் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார்.

இசையமைப்பளராக தோழா, மன்மத லீலை, பார்ட்டி என பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்‌. சமீப காலங்களில் ஆல்பம் பாடல்களில் பாடி வந்தவர் தற்போது ஒரு புது ஆல்பம்‌ ஒன்றிற்கு பாடி இசையமைத்து, நடித்துள்ளார்.

இதற்கு முன்பு பல மியூசிக் வீடியோ மற்றும் குறும்படங்களை தயாரித்து விருதுகளை வென்றுள்ள டியூப்லைட் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் இந்த புது மியூசிக் வீடியோவை “Smooth Play Boy- தப்பாக நினைக்காத” என்னும் பெயரில் தயாரித்துள்ளது‌.

இயக்குனராகவும் நடிகராகவும் இயங்கி வரும் நவாஸ் என்பவர் தான் டியூப்லைட் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். பாடலை வெட்டி பையன் வெங்கட் என்பவர் எழுத, வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இப்பாடலில் அனிமேட்டட் கதாபாத்திரமாக பிரேம்ஜி அமரன் நடித்துள்ளார்.

இந்த மியூசிக் வீடியோவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, விரைவில் பாடல் வெளிவர தயார் நிலையில் உள்ளது‌.

Facebook Comments

Related Articles

Back to top button