Spotlightசினிமா

அமோக வரவேற்பை பெற்ற “டாணா” டீசர்!

வைபவ் நடிப்பில் உருவாகி வரும் படமான ‘டாணா’ படத்தின் டீசர் நேற்று (ஜூலை 22) வெளியிடப்பட்ட நிலையில், நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவராஜ் சுப்ரமணி எழுதி இயக்கியுள்ள “டாணா” திரைப்படத்தை, நோபல் மூவீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.சி. கலைமாமணி & எம்.கே.லக்‌ஷ்மி கலைமாமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். எச்.சனாவுல்லா கான், பிரசாந்த் ரவி, எஸ்.சந்தோஷ் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் (இசை), சிவா ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), பிரசன்னா ஜி.கே.(படத்தொகுப்பு), பசார் என்.கே. ராகுல் (கலை), வி.கோட்டி (சண்டைப்பயிற்சி), கு. கார்த்திக் & தனிக்கொடி (பாடல்கள்), கீர்த்தி வாசன் (உடைகள்), சதீஷ் (நடனம்), டி.உதயகுமார் (ஆடியோகிராபி), எஸ்.ராதாகிருஷ்ணன் (இணை இயக்குநர்), ஆர்.மூர்த்தி (வி.எஃப்.எக்ஸ்), தண்டபாணி (தயாரிப்பு நிர்வாகம்), வி.சுதந்திரமணி (நிர்வாக தயாரிப்பு), அருண் கே விஸ்வா (லைன் புரொடியூசர்)ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button