
நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர் திவ்யா தாமோதரன் கூறும்போது, ‘பெண்களை பற்றி என்ன மாதிரியான எண்ணங்கள் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
மிஞ்சி மிஞ்சி போனால் சாதித்த பெண்களை உங்களால் என்ன கூற முடியும், கூப்பிட்டாலும் வருவாள் என்று தானே,
இந்த மதி நீ கூப்பிட்டு அவள் வரவில்லை என்றா ?? இல்லை உன்னை எஞ்சி வளர்ந்து விட்டாள் என்றா??
கைதட்டல் உன் செவிக்கு எட்ட நீ ஆசைப்பட்டால் சென்று குரங்கு வித்தை காட்டிடு.
உன் சொல் வித்தையை இனியும் மேடை ஏற்றாதே..
ஏனென்றால் அதைக் கேட்டு தலை குனிய நாங்கள் விரும்பவில்லை.
இங்கு அவள் போடும் வேடங்கள் அனைத்தும் உன்னை போன்ற என்னை போன்ற சாதாரண மனிதர்களை கவரவே,
அவளின் உண்மை முகம் அவளுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கே தெரியும். பெண்களை இழிவு படுத்தும் இது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விடு. பகிரங்கமாக மன்னிப்பு கேள்…
பெண் வெற்றியே
இச்சமூகத்தைன் வெற்றி!” என்று கூறியுள்ளார்.





