இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்து திரைப்படம் தான் சூது கவ்வும். 2013 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது.
மிகப்பெரும் வெற்றிபெற்ற இப்படத்தை சி வி குமார் தயாரித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் இப்படம் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்த படம் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் தயாரிப்பாளர் சி வி குமார்.
எஸ் தங்கராஜ் அவர்களோடு இணைந்து இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் சி வி குமார்.
இரண்டாம் பாகத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருப்பதாக தயாரிப்பாளர் சி வி குமார் தெரிவித்துள்ளார்.
படத்தை எஸ் ஜே அர்ஜூன் இயக்கியிருக்கிறார். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வரும் 13 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
முதல் பாகம் கொடுத்த வெற்றியை இரண்டாம் பாகமும் நிச்சயம் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கைக் கொண்டுள்ளது.