
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் தலைமை வகிக்க, பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருக்க, நாளை நடைபெறும், பூத்தில் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா விவகாரத்தில் முதல் ஆளாக இருப்பதால் அவர் பதவி விலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 18-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.