Spotlightவிமர்சனங்கள்

பஞ்ச பூதங்களும் பாவங்களும்… பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

பஞ்சராக்‌ஷரம் என்றால் நமசிவாய (சிவன்) என்று பொருள். எனவே அதற்கு ஏற்ப பஞ்சபூதங்களை (நிலம், நீர், காற்று, தீ, வானம்) கேரக்டர்களாக அமைத்து படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி வைரமுத்து.

அதன்படி 3 ஆண்கள்… 2 பெண்கள் தான் படத்தின் உயிரோட்டம்.

சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகிய 5 பேரும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திக்கின்றனர்.

ஒவ்வொருவரும் வெவ்வெறு துறையை சார்ந்தர்வகள் அவர்களின் பயணம் அந்த இலக்கை நோக்கி நகர்கிறது. முதன்முறையாக விருந்தில் ஏற்பட்ட தங்களது நட்பை கொண்டாட சுற்றுலா செல்ல முற்படுகின்றனர்.

முதலில் மதுஷாலினி தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொள்கிறார்.

ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்குகின்றனர். அப்போது விளையாட்டாக அங்குள்ள ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கின்றனர்.

அதுதான் பஞ்சராக்‌ஷரம் என்ற புத்தகம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சில வாசகங்களை படிக்கிறார்கள்.

பெரும்பாலும் நெகட்டிவ்வான வாசகங்களையே படிக்கிறார்கள். எனவே அதன்படியே அவர்களின் வாழ்க்கையில் கெட்டது நடக்கிறது.

இதனால் குழப்பம் அடையும் எல்லாம் கெட்டதுக்கும் அந்த புத்தகம் தான் காரணம் என்பதை அறிகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள்? என்பதுதான் படத்தின் கதை.

சந்தோஷ் (வானம்) பைக்கில் பல மாநிலங்கள் சுற்றுகிறார் இவர். ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் நடித்துள்ளனர்.

அருமையான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டும் போதுமான நடிப்பை இவர்கள் வெளிப்படுத்தவில்லை என்பதே ஆதங்கம்.

நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக நடித்துள்ளார். இவரின் கேரக்டர் திறம்பட உள்ளது.

சனா அல்டாப் (நீர்) மனிதநேயமிக்க பெண்ணாக மற்றவர்களுக்கு உதவ கூடியாக பெண்ணாக நடித்துள்ளார்.

சாலையில் விபத்துக்கள் நடைபெறுவது சகஜம்தான். அதற்காக நாம் பயணிக்காமல் இருப்பது சரியல்லை. ஆனால் அதே சமயம் விபத்தை பற்றி யோசிக்காமல் பயணிக்க வேண்டும் என கருத்தை வலியுறுத்திருக்கிறார் டைரக்டர்.

அதாவது விபத்து நடந்துடுமோ என்று பயணித்தால் நிச்சயம் விபத்து நடந்துவிடும் என்கிறார் இயக்குனர்.
சுந்தர மூர்த்தியின் இசையும் யுவாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கை கொடுத்துள்ளன.

பஞ்ச பூதங்களை சொன்ன இயக்குனர் அதற்கேற்ப நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இதிகாச காலத்தில் கதையை தொடங்கி நவீன காலத்தில் கதையை முடித்திருக்கிறார்.

ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றா 3 ஆண்கள் 2 பெண்கள் காட்டியபோதும் கண்ணியமாக நட்பாக காட்டியுள்ளார். காதல் கத்திரிகாய் எதுவுமில்லை.

ஆக மொத்தத்தில் ‘பஞ்சராக்‌ஷரம்’ பஞ்ச பூதம் கேரக்டர்களை காட்டி அவர்கள் படும் பாவங்களை காட்டியிருக்கிறார்.

Pancharaaksharam movie review

Facebook Comments

Related Articles

Back to top button