சிலை கடத்தல் வழக்கை ஐஜி பொன் மாணிக்கவேல் சில வருடங்களாக தனது குழு மூலம் விசாரித்து வருகிறார்.
பல சிலைகளை வெளிநாடுகளில் இருந்து கைப்பற்றி தமிழகத்திற்கு கொண்டு வந்தார் பொன் மாணிக்கவேல்.
இந்நிலையில், ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணையில் தங்களக்கு திருப்தி இல்லை எனக் கூறி சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-விடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடுத்த வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஒரு நிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதியில்லாத அரசாணை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Facebook Comments