Spotlightசினிமா

பிக் பாஸ் மீரா மிதுனுக்கு மத்திய அரசு பதவி..?? வெளியான அதிர்ச்சி தகவல்!

னியா தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். இவர், 8 தோட்டாக்கள், தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மீராமிதுணுக்கு தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிக்கை மற்றும் அடையாள அட்டையையும் சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

அதில், “பெரும்பாலான பேரரசுகள் மற்றும் நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் ஊழல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலைவர்கள் தங்கள் சொந்த இனத்தை வென்றெடுக்கும் வரை அவர்களுக்கு விருப்பமான ஒரு தலைவருக்கு வாக்களிப்பதில் அரசாங்கத்திற்கு எதிராக ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை முழக்கமிட்டு நான் நீண்ட காலம் வாழ்ந்தேன். ஆனால் இங்கே அனைவரையும் திருப்பிக் கொண்டு வருகிறேன், இப்போது ஊழல் தடுப்பு ஆணையத்தில் (ஏ.சி.சி) சென்னை தமிழ்நாடு மாநில இயக்குநராக உள்ளேன், இனிமேல் யாரும் மறைக்க முடியாது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது என்று கூறி, ஊழல் இல்லாத அரசுக்கு என்னுடன் கைகோருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், விசாரித்ததில் இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு என் ஜி ஓ அமைப்பைச் சார்ந்தது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த NGO அமைப்பில் தான் மீரா மிதுன் இணைந்து ஊழலுக்கு எதிராக முழக்கமிடுவோம் என்று கூறி வருகிறார்.

https://twitter.com/meera_mitun/status/1195068232065015809?s=20

Facebook Comments

Related Articles

Back to top button