Spotlightவிமர்சனங்கள்

ஆக்‌ஷன்; விமர்சனம் 3/5

ந்திய இராணுவத்தில் மிகுந்த உயர்ந்த பொறுப்பு வகித்து வருகிறார் விஷால். இவரது தந்தை பழ. கருப்பையா தமிழக முதல்வராக இருக்கிறார். துணை முதல்வராக விஷாலின் அண்ணன் ராம்கி இருந்து வருகிறார்.

ராம்கியை முதல்வராக்க பழ கருப்பையா தமிழகத்தில் ஒரு பிரம்மாண்ட மாநாடு நடத்துகிறார். அதில், தேசிய கட்சி தலைவர் ஒருவரை கலந்து கொள்ள வரவழைக்கிறார். அந்த மாநாட்டில் தேசிய தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். இந்த பழி முழுவதும் பழ கருப்பையா மற்றும் ராம்கி மீது விழுகிறது.

இந்நிலையில், ராம்கியும் கொல்லப்படுகிறார். தனது குடும்பத்தின் மீது விழுந்த கலங்கத்தை போக்கவும், அண்ணன் ராம்கியை கொன்றவர்களை பழி வாங்கவும் விஷால் எடுக்கும் ‘ஆக்‌ஷனே படத்தின் மீதிக் கதை….

மிடுக்கான இராணுவ அதிகாரியாக விஷால் தன் நடிப்பில் மிரட்டலை கூட்டியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அசுர வேகம் எடுத்து காண்போரை மிரள வைத்திருக்கிறார் விஷால். முதல் பாதி ஆமை போல் வேகம் சற்று குறைவாக இருந்தாலும், இரண்டாம் பாதி தனது அதிரடியான ஆக்‌ஷனில் விறுவிறுப்பை ஏற்றி கொண்டு செல்கிறார் விஷால்.

நாயகிகளாக வந்த, தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அகன்ஷா பூரி மூவரும் அழகு சிலை தான். அதிலும், தமன்னா அவ்வப்போது பறந்து பறந்து வந்து செய்த ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது. கவர்ச்சிக்கு வந்த நின்ற அகன்ஷா பூரி, இளைஞர்களின் மனதை வருடி செல்கிறார். கண்களால் கவிதை பேசி செல்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி.

ராம்கி, பழ கருப்பையா, சாயா சிங், யோகி பாபு, சாரா ஆகியோர் படத்தில் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

வில்லனாக வந்த கபீர் சிங் வழக்கம் போல் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.

நாடு விட்டு நாடு சென்று படப்பிடிப்பை நடத்திய படக்குழுவினர், சற்று கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். பலவீனமான கதையை எடுத்து ஆக்‌ஷன் செய்ய முயன்று சற்று தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த சில ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான், பின்னனி இசை இன்னும் சற்று நன்றாகவே கொடுத்திருக்கலாம்.

டட்லியின் ஒளிப்பதிவு ஸ்டண்ட் காட்சிகளில் நன்றாக காட்டியிருப்பது படத்திற்கு சற்று பலம்.

ஆக்‌ஷன் – நீங்க திரும்பவும் காமெடி, பேய் கதைக்கே திரும்பிடுங்க சுந்தர் சி சார்….

Facebook Comments

Related Articles

Back to top button