
வேங்கடபதி பிலிம்ஸ் சார்பில் புவனேஸ்வரி சங்கர் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு “கட்டம் தன் கடமையை செய்யும்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
“நாடக காதலுக்கு சட்டம் தான் வேலை செய்யும்”, உண்மை காதலுக்கு கட்டம் தான் வேலை செய்யும் என்பதே இந்த படம் சொல்ல வரும் கருத்து. ஏற்கனவே ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரிஜன் சுரேஷ் இந்த படத்தின் நாயகனாக களமிறங்க கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கின்றனர்.
படக்குழு மற்றும் பிற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Facebook Comments




