Spotlightசினிமாவிமர்சனங்கள்

பல்லு படாம பாத்துக்க – விமர்சனம் 2/5

யக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா, ஷாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பல்லு படாம் பாத்துக்க. படத்தின் டைட்டிலே பல பல்லானதை கூறுவதோடு மட்டுமல்லாது படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால், படத்திற்கு குறிப்பிட்ட ரசிகர்களையே கார்னர் செய்திருக்கின்றனர்.

கதைப்படி,

கேரளா மாவட்டத்தில் குஞ்சுதண்ணிகாடு என்ற மலையில், வாழ்க்கையை வெறுத்த சிலர் அங்கு தற்கொலை செய்து கொள்ள வருகின்றனர். அப்போது அங்கு இருக்கும் அட்டகத்தி தினேஷ் அனைவரைக்கும் மதுவை கொடுக்கிறார். அதன் பிறகு அந்த காட்டுக்குள் செல்லும் அவர்கள், அங்கு கும்பலாக இருக்கும் ஜாம்பிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

அப்போது மின்னலாக வந்து தினேஷ் மற்றும் டீமை காப்பாற்றுகிறார் சஞ்சிதா. தொடர்ந்து ஜாம்பிகள் உயிர் பிழைத்துக் கொண்டு தினேஷ் & டீமை தின்பதற்காக வருகிறது. எப்படி அந்த ஜாம்பிகளிடம் இவர்கள் தப்பித்தார்கள்.? மனிதர்களாக இருக்கும் இவர்கள் எப்படி ஜாம்பியாக மாறினார்கள்.? சஞ்சிதா அந்த காட்டிற்குள் என்ன செய்கிறார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ்.. இல்ல இல்ல இப்படி சொல்லக் கூடாது படத்தின் நாயகனாக படத்தை சொதப்பியிருக்கிறார் அட்டகத்தி தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும்…. கொடுக்கப்பட்ட டயலாக்கை ஒரு இடத்தில் கூட நிறுத்தி பேசாமல் ஓட விட்டு பேசி காட்சிகளை சொதப்பி எடுத்திருக்கிறார்.

கிளாமருக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் விடுக்கென வந்து நிற்கிறார் சஞ்சிதா. ஜாம்பி படம் என்றாலே ஹீரோயின்களுக்கு இந்த காஸ்டியூம் தானா என்று கேட்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்…

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் ஓவர் ஆக்டிங்க் கொடுத்து படத்தின் காட்சிகளை கெடுத்து வைத்திருக்கிறார்கள். டபுள் மீனிங்க் என்ற பெயரில் முகத்தை சுழிக்க வைக்கும் காட்சிகள்தான் அதிகம்.

எந்த வித கதையும் இல்லாமல், கதைக்கான திரைக்கதையும் இல்லாமல் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று தான் ஒவ்வொரு காட்சியிலும் கேட்க வைத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் வேண்டாமென்று தூக்கியெறிந்த கதைகளில் இந்த மாதிரியான ஜாம்பி கதைகளும் அடங்கும். காலாவதியான கதையை எடுத்து வந்து நம்மை சோதனைக்குள் உள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்கு முன்னாள் எடுக்கப்பட்டு கிடப்பிலேயே இருந்த படம்தான் இந்த “பல்லு படாம பாத்துக்க”

இந்த படத்தை பார்த்ததும் கலகலப்பு படத்தின் ஒரு டயலாக் தான் ஞாபகத்திற்கு வந்து சென்றது … “இதுக்கு பேசாம பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்”.

பல்லு படாம பாத்துக்க – தலைவலி வராம பாத்துக்கங்க….

Facebook Comments

Related Articles

Back to top button