Spotlightசினிமா

யார் அந்த ‘பஜாரி’; சஸ்பென்ஸ் வைக்கும் படக்குழு!

GDR நிறுவனம் தனது இரண்டாவது படத்தை இன்று அறிவித்துள்ளது. படத்திற்கு ‘பஜாரி’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் முதல் படமாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’(PUBG) என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்.

பப்ஜி படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் நிலையில், இரண்டாவது படத்தின் வேலைகளை விரைவில் துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பஜாரி என்பது யார்..?? என்ற மிகப்பெரும் கேள்வி சினிமா ரசிகர்களிடையே எழும்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியில், பஜாரி என்ற வார்த்தையை குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் மீது சுமத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை, இப்படத்தில் அவரும் நடிப்பாரோ..?? என்ற கேள்வியும் எழுகிறது.

விரைவில் நடிகர், நடிகைகள், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்களின் விபரம் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button