Spotlightதமிழ்நாடு

சாதிக் கொடுமை; கொட்டும் மழையில் பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

துரை திருமங்கலம் சுப்புலாபுரம் பகுதியில் ஏராளமான பட்டியலினத்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கென்று மயான பகுதி இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளார். மயானம் இல்லாததால், பிணத்தை திறந்த வெளியில் எரிப்பது தான் வழக்கம். அன்று மழை அதிகமாக கொட்டிக் கொண்டே இருந்ததால், வேறு வழியின்றி, அங்குள்ள வேறொரு சாதியை சேர்ந்த மயான மேடையில் எரிக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர்கள் தொடர்ந்து மறுக்கவே, வேறு வழியின்றி வெட்ட வெளியில் பிணத்தின் மேல், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

தொடர்ந்து சாதியின் கொடுமை தென்தமிழகத்தில் நடந்தேறிவண்ணம் உள்ளது. இதற்கு ஒரு முடிவுதான் என்ன..??? என பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button