
காந்தி கிருஷ்ணா அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, க்ருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த ப்ரேக் பாஸ்ட்.
இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். மேலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம் வி பன்னீர் செல்வம்.
தயாரித்திருக்கிறார் கிரிஜா வரதராஜ். படத்தொகுப்பு செய்திருக்கிறார் பாஸ்கர் & சுஜித்.
இன்றைய இளைஞர்களின் வேகமான காதல், பின் நிதானம் இல்லாத வாழ்க்கை என நடந்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை முறையை திரையில் கொண்டு வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “Breakfast”.
இயக்குனர் காந்தி கிருஷ்ணா உறவுகளை பிணைப்பை மிகவும் நுட்பமான முறையில் கையாண்டு அதனை படைப்பாக கொடுத்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ – ஹீரோயின் காதலில் தொடங்கிய உறவு, பின் திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்னவாக மாறியது என்பதை காட்டியிருக்கிறது இந்த படம். ஆரம்பத்தில் இருந்த அன்பு, நம்பிக்கை, கனவுகள், பின்னர் புரிதல் குறைவு, ஈகோ, மன அழுத்தம் ஆகியவற்றால் எப்படி சிதறுகிறது என்பதை படம் யதார்த்தமாக காட்டுகிறது.

ராணவ் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். நாயகனுக்கு ஏற்ற ஜோடியாக நம்மை நன்றாகவே கவர்ந்திருக்கிறார் ரோஸ்மின். அழகிலும் சரி நடிப்பிலும் சரி நல்ல ஒரு மார்க் வாங்கியிருக்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த சம்பத் குமார், கஸ்தூரி, க்ருத்திக் மோகன் உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் தங்களது அனுபவ நடிப்பை ஒவ்வொரு இடத்திலும் கொடுத்திருந்தனர்.
G.V. Prakash Kumar இசை படத்திற்கு மிகப்பெரும் பில்லராக வந்து நின்றிருக்கிறது. ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் என்றே கூறலாம். விஷுவலாக ஒரு கிராண்ட் பிக்சரை கண்முன்னே காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஆங்காங்கே திரைக்கதை சற்று ஸ்லோ ஆனதை பார்க்க முடிந்தது. க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் யதார்த்தத்தை கலந்து கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. மற்றபடி, இந்த கால இளைஞர்களின் வாழ்வியலையும் அவர்களது வேகமான மனநிலையையும் கண்முன்னே கொண்டு வந்ததில் வென்றிருக்கிறார் இயக்குனர்.
நல்லதொரு மார்டன் காதல் கதை தான் இந்த பிரேக் பாஸ்ட்…




