Spotlightசினிமா

அஜித்தை அடுத்து சூர்யாவோடு கைகோர்க்கும் சிவா!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் ‘விஸ்வாசம்’. அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம்’, பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் சிவாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மிக பெரிய ஹிட் என பதிவானது.

நடிகர் அஜித் அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சிவா, நடிகர் சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Facebook Comments

Related Articles

Back to top button