Spotlightசினிமாவிமர்சனங்கள்

ரெஜினா – விமர்சனம் 2.5/5

டாமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா, ஆனந்த் நாக், ரித்து மந்த்ரா, விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்யன், சாய் தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ரெஜினா.

கதைப்படி,

தனது காதல் கணவனை திருமணம் செய்து கொள்கிறார் சுனைனா(ரெஜினா). சிறு வயதிலேயே தனது தந்தையை வெட்டி கொன்றதை நேரில் பார்த்தவர் சுனைனா..

வங்கியில் பணிபுரியும் சுனைனாவின் கணவரை, வங்கிக் கொள்ளை கும்பல் ஒன்று கொன்று விடுகிறது.

தனது கணவனை கொன்றவரை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தை அணுகுகிறார் சுனைனா.. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

இதனால், தானே அந்த கொலைகாரர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் ரெஜினா.

ரெஜினா எப்படி கண்டுபிடித்தார்.? என்ன நடந்தது .? இதுவே படத்தின் மீதிக் கதை.

படத்தில் ஆர்ட் மற்றும் ஒளிப்பதிவு இந்த இரண்டு மட்டுமே பெரிதளவிற்கு நின்று பேசுகிறது.

மற்றபடி, கதை என்பது ஒரு சிறிய லைன் மட்டுமே ஒட்டுமொத்தமாக கண்ணில் படுகிறது. வலுவான கதை இல்லாதது பெரிய சறுக்கல் தான்.

அதுமட்டுமல்லாமல், சுனைனாவை ரெஜினாவாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மிகப்பெரும் ரெளடியை சாதாரணமாக கொன்று விட்டு வருகிறார். அதை எப்படி தான் இயக்குனர் படம்பிடித்தாரோ..

ரெஜினா – வலுவில்லை… 

Facebook Comments

Related Articles

Back to top button