Spotlightசினிமா

இடியட் பட இயக்குனரின் குமுறல்; செவி கொடுக்காத தயாரிப்பு நிறுவனம்!!

 

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிக்க ராம்பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “இடியட்”. இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி இடியட் திரைக்கு வருகிறது.

இயக்குனர் ராம்பாலா விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபாவை இயக்கி வந்தவர். அதன் பிறகு சினிமா பக்கம் திரும்பியவர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 படங்களை இயக்கி மாபெரும் ஹிட் அடிக்க வைத்தவர்.

இப்படங்களைத் தொடர்ந்து தற்போது இடியட் படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், சில தினங்களாக இயக்குனர் ராம்பாலா தனது மனக்குமுறல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில், ஒருவன் தன் குறையை தானே அறியப்பட வேண்டும் அல்லது மற்றவர்களால் அறியப்பட வேண்டும். அதை அறியாதவன் அஃறினையாக இருக்க வேண்டியது தான்,

மற்றொரு பதிவில், படிப்பதும் சிந்திப்பதும் வேறு வேறு , சிந்திப்பவன் சிறந்தவன் ஆகின்றான் படித்தவன் சிந்திப்பவனை குறை சொல்லி காலம் தள்ளுவான்.

மற்றொன்றில், நான் தேவை இல்லை என்ற நிலையில் நீங்கள் மேதாவி என நினைத்து என் படைப்பில் கை வைத்தப் பிறகு, என்னுடைய பெயர் மட்டும் உங்களுக்கு தேவையா ? அதையும் எடுத்து விடுங்கள். எப்போதும் குற்றமுள்ள நெஞ்சம் உங்களை குறுகுறுக்கச் செய்யும். அழுததற்கும் கெஞ்சியதற்கும் பலன் இல்லாதபோது நான் என்ன செய்ய ?

என்று பதிவிட்டுள்ளார். இடியட் படத்தினை இயக்கி முடித்தப் பிறகு தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் தன் உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பிதிருக்கிறது.

இயக்குனர் இல்லாமலேயே இயக்கி முடித்த படத்தின் மீது கை வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். அதுமட்டுமல்லாமல், இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் இசையையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்தினர்.

ஒரு படைப்பினை இயக்கிய இயக்குனருக்கு மட்டுமே தெரியும் தன் படைப்பு எந்த மாதிரி எடுக்க வேண்டும், அதை மக்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்று. அவரின் ஒப்புதல் இன்றி படத்தின் மீது கை வைத்துள்ளனர்.

மேலும், படத்தில் பணிபுரிந்ததற்காக எந்த ஒரு ஊதியமும் இயக்குனருக்கு வழங்கப்படவில்லையாம்..

ரஜினி நடித்த படையப்பா படத்துல ஒரு சீன் வரும்…

மாப்ள இவர் தான், ஆனா இவர் போட்ருக்குற சட்டை அவருடையதில்லை என்ற காமெடி போல்,

இடியட் படத்தை இயக்கியவர் ராம் பாலா தான், ஆனால் படைப்பாக கொடுக்கப்போவது அவர் இல்லை.. என்ற நிலையில் தான் இடியட் படம் உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button