
தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமனிதன்”.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து தயாரித்திருக்கிறார். ஆர் கே சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. குடும்ப பாங்கான படங்களை மட்டுமே எடுத்து ரசிகர்களின் மத்தியில் “குட் புக்” இயக்குனர்களின் டாப் லிஸ்டில் இருப்பவர் சீனு ராமசாமி.
”மாமனிதன்” படமும் குடும்பங்களை கவரக்கூடிய படமாக வந்திருப்பதால் அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





