Spotlightவிமர்சனங்கள்

காலேஜ் குமார் விமர்சனம் 2.75/5

2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் இந்த ‘காலேஜ் குமார்’. தமிழில் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்கியிருக்கிறார். பிரபு, ராகுல் விஜய் மற்றும் மதுபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

எல் பத்மநாபா தயாரித்திருக்கிறார்.

கதைப்படி, சிறிய வயதில் ஏற்பட்ட அவமானத்தால் தனது மகனை நன்றாக படிக்க வைத்து மிகப்பெரும் ஆளாக்க வேண்டும் என்று பிரபு, தனது மகன் ராகுலை படிக்க வைக்கிறார்.

ஆனால், ராகுலோ திருட்டுத்தனம் செய்து அப்பாவை தான் நன்றாக படிப்பதாக ஏமாற்றி வருகிறார். ராகுல் ஏமாற்றுவது பிரபுவிற்கு தெரிய வர, ராகுலுக்கும் பிரபுவிற்கு பெரிய சண்டை ஏற்பட்டு இருவருக்குள்ளும் ஒரு சவால் விடுத்துக் கொள்கிறார்கள்.

அது என்ன சவால், யார் அந்த சவாலில் வெற்றி பெற்றார் என்பது படத்தின் மீதிக் கதை.

ராகுல் விஜய், படத்தின் நாயகன் என்றாலும், தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து, சிறப்பு செய்திருக்கிறார். தனது மகனுக்காக வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக இருக்கட்டும், மனைவி மதுபாலாவோடு அடிக்கும் லூட்டியாக இருக்கட்டும் அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மதுபாலா, கடமைக்கு நடிப்பது போன்ற காட்சியமைப்பு எரிச்சலடைய வைத்துவிட்டது.

ஃகுதுப் ஈ க்ருபா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான்… பின்னனி இசை கதையோடு பயணம் செய்கிறது.

குரு பிரசாத் ராய் அவர்களின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் அளிக்கிறது.

நாயகி ப்ரியா அழகாக இருந்தாலும், காட்சிகள் அவ்வளவாக இல்லாததால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

நாசர், மனோபாலா, சாம்ஸ் இருந்தும் காமெடிக்கு பஞ்சம் வந்தது போல் படம் முழுவதும் வறட்சி நிலை தான்.

கதை நன்றாக இருந்தாலும் அதை கொடுத்த விதத்தில் இயக்குனர் சற்று கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிரபு தவிர மற்ற அனைவரும் நடிப்பது(கதாபாத்திரத்தோடு ஒன்றாமல்) ஈசியாக தெரிந்தது.

காலேஜ் குமார் – ஜஸ்ட் பாஸ் மார்க் தான்.

Facebook Comments

Related Articles

Back to top button