Spotlightசினிமா

வேட்டையாடி விளையாட வருகிறார் நிகில் ‘ஹாசன்’!!

 

தாதா 87 படத்தின் மூலம் இயக்கனராக களம் புகுந்தார் விஜய்ஸ்ரீ ஜி..

இப்படத்தினைத் தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தினை இயக்கினார்.. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக வித்யா பிரதீப் நாயகியாக நடிக்க ‘பவுடர்’ என்னும் படத்தை தற்போது இயக்கத் துவங்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீ ஜி.

இப்படத்தில் பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முதன் முறையாக நடிகராக களமிறங்குகிறார்.

ராகவன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் நிகில்.

உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் தொடர்பாளராக பல ஆண்டுகளாக இருந்தவர். உலகநாயகனின் வலது கையாக வலம் வந்தவர் நிகில்.

தற்போது, முதல் முறையாக நடிகராக வேட்டையாடி விளையாட வருகிறார் நிகில்.

Facebook Comments

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close