
தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!
நடிகர் விஜய்யை வைத்து நான்காவது முறையாக XB பிலிம் கிரியேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜய்யின் 64 வது படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கத்தி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.பிலோமின் ராஜ் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார் .
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சம்மர் 2020 இல் திரைக்கு வரவிருக்கிறது .





