Spotlightசினிமா

சமூகத்தின் முகத்தை கிழித்தெறியுமா *வன்முகம்*

 

எதார்த்த நாயகன் *கதிரவன்* துணிச்சலோடு நடிக்க, *ஆறடி* திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக பல சர்வதேச விருதுகளை குவித்த நாயகி *தீபிகா ரங்கராஜு* ம் இணைந்து நடிக்கும் படம் *வன்முகம்*. இதை *ரஞ்சித் பால்* இயக்குகிறார்.

இப்படத்தில் *தல அஜித்* (நேர்கொண்ட பார்வை), மக்கள் செல்வன் *விஜயசேதுபதி*(கவன்), *தனுஷு* டன் (வேலை இல்லா பட்டதாரி) போன்ற படங்களில் நடித்த நடிகை *பிரியதர்ஷினி ராஜ்குமார்* முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் வெற்றி பெற்ற *ஜீ.வி.பிரகாஷ்* மற்றும் *சித்தார்த்* நடித்த *சிவப்பு மஞ்சள் பச்சை* படத்தின் வில்லன் நடிகர் *பிரதீப்* இதில் மிரட்டி இருக்கிறார்.

இன்னும் பல நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்து நடித்து அசத்தி இருக்கின்றனர்.

இதன் முழு படப்பிடிப்பும் *புதுச்சேரி* மாநிலத்தை சுற்றியே நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் *உன்னால் ஏனோ* என்கிற பாடல் இணையதளத்தில் வைரலாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு நல்ல வரவேற்பையம் பெற்றுள்ளது.

இந்த *வன்முகம்* வருகிற *டிசம்பர்* மாதம் இறுதியில் மக்களிடம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button