Spotlightவிமர்சனங்கள்

கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மீகா, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன் நடிப்பில், N.S.உதய குமார் ஒளிப்பதிவில், நிவாஸ் K பிரசன்னா இசையில் உருவான படம் “கோடியில் ஒருவன்”.

கிராமத்தில் பிறந்து தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்கு சென்னைக்கு படிக்க வருகிறார் நம் கதாநாயகன் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள அரசியல்வாதிகளாலும் ரவுடிகளாலும் பல பிரட்சனைகளை எதிர்கொள்கிறார்..

இதற்கு மேல் அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் பெரிய பதவி ஒன்று வேண்டும் என்றென்னி அரசியலில் தனது காலடியை எடுத்து வைக்கிறார்..

சுயேட்சையாக நின்று எதிரிகள் கொடுக்கும் இன்னல்களை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை..


சுவாரஸ்யமான திரைக்கதையில், கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்து அக்கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.. மொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார் விஜய் ஆண்டனி.

ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸான நடிப்பை கொடுத்து ஆச்சர்யப்படுத்திருக்கிறார் நம் ஹீரோ…

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கூட கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஹீரோயின் ஆத்மீகா..

வழக்கம்போல் வில்லனாக தனது மிரட்டல் நடிப்பில் ராமசந்திரன் ராஜு கலக்கியிருக்கிறார்.

சூப்பர் சுப்புராயன், பூ ராம், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் படத்தின் கதாபாத்திரத்தோடு ஒன்றிருக்கிறார்கள்…

உதயகுமார் அவர்களின் கலை வேலைப்பாடு படத்தில் பெரிதாக பேசப்பட்டுள்ளது..

ஆக்‌ஷன் காட்சிகளை அரங்கமே அதிரும் வகையில் கொடுத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்திவ்.

பின்னனி இசையில் கதையோடு இணைந்து பயணிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா..

மெட்ரோ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனுக்கு மற்றுமொரு மகுடமாக அமைந்திருக்கிறது இந்த “கோடியில் ஒருவன்”.

நீண்ட கால கொரோனா பேரிடருக்குப் பிறகு மக்களை திரையரங்கு வர வைக்கும் ஒரு முழு எண்டர்டெய்னர் படமாக திரைக்கு வந்துள்ளது இந்த ” கோடியில் ஒருவன்”.

கோடியில் ஒருவன் – வெற்றி மகுடம் சூட்டிக் கொண்டான்..

 

Facebook Comments

Related Articles

Back to top button