
சாந்தணு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “இராவண கோட்டம்”.
இப்படத்தினை அதிக பொருட் செலவில் தயாரித்திருப்பவர் பிரபல தொழிலதிபரான திட்டக்குடி கண்ணன் ரவி.
படத்தயாரிப்பில் மட்டுமல்லாது தொடர்ந்து பல தொண்டுகளையும் செய்து வருகிறார்.
அந்த வரிசையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அருள்மிகு அசனாம்பிகை திருக்கோவிலுக்கு பங்குனி உத்திரத் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் புடவைகளையும் தானமாக வழங்கியிருக்கிறார்.
பல சமூக தொண்டுகளில் ஆர்வம் காட்டி வரும் திட்டக்குடி கண்ணன் ரவி, இந்த சேவை போன்ற பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து தனது சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Facebook Comments





