
கடந்த வருடம் தமிழகத்தை புரட்டி போட்ட ஒரு சம்பவம் கஜா புயல். இதில், பலர் தங்களது உடைமைகளையும் வீடுகளையும் இழந்தனர்.
வீடுகளை இழந்த பலருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் பல நலத்திட்ட உதவிகள் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சுமார் பத்து பேருக்கு புதிதாக வீடுகளை கட்டிக் கொடுத்தார் ரஜினிகாந்த். அவர்களை இன்று காலை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களின் கைகளில் வீட்டின் சாவியை வழங்கினார் ரஜினிகாந்த்.
மேலும், அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார் ரஜினிகாந்த்.
Facebook Comments




















