Spotlightசினிமா

18 வருடத்திற்கு பிறகு மீண்டும் கைகோர்க்கும் அஜித் – வடிவேலு!

ச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உருவான திரைப்படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தினை தயாரித்திருந்தார் போனி கபூர்.

இக்கூட்டணி மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற நவம்பர் 24ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், வலிமை படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் போலிஸ் என்பதால் அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.

முன்னதாக எழில் இயக்கத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து ‘ராஜா’ படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது.

தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு, வலிமை படத்தில் அஜித்தும் வடிவேலும் இணைந்து நடிக்க இருப்பதாக வந்த செய்தி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button