
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.
படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்து வைத்துள்ளது. படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக கமல்ஹாசன் நாடுநாடாக பறந்து சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு சென்னை ரோஹினி திரையரங்கில் அதிகாலை 4 மணியளவில் உலகநாயகன் கண்டுகளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு ரசிகர்கள் கூட்டம் பெரிதாக படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments





