Spotlightசினிமாவிமர்சனங்கள்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம் 3.25/5

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் இந்த சிங்கப்பூர் சலூன்.

நாயகன் ஆர் ஜே பாலாஜியும் கிஷன் தாஸும் நெருங்கிய நண்பர்கள். சிறுவயது முதலே நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவயதில் தனது கிராமத்தில் இருந்த சலூன் கடைக்காரர் லால் மீது அலாதி பாசம் உண்டு ஆர் ஜே பாலாஜிக்கு.

அவரின் முடிவெட்டும் ஸ்டைலைக் கண்டு, அதை ஆர் ஜே பாலாஜியும் ஃபாலோ செய்கிறார். தொடர்ந்து அவருக்கும் முடிவெட்டுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.

கல்லூரி வாழ்க்கை முடிக்கிறார் ஆர்ஜே பாலாஜி. தொடர்ந்து காதலும் தோல்வியில் முடிய, பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

மிக பிரமாண்டமான சலூன் ஒன்றை திறக்க ஆசைப்படுகிறார் ஆர் ஜே பாலாஜி. கஷ்டப்பட்டு சில கோடிகளை முதலீடாக வைத்து அந்த சலூனை திறக்கிறார்.

தொழில் போட்டியாளர்கள் ஒரு பக்கம் இயற்கை அழிவு ஒரு பக்கம் என ஆர் ஜே பாலாஜியை துரத்த இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் தனக்கானதை சிறப்பாக செய்து முடிப்பவர் ஆர் ஜே பாலாஜி. இதிலும் அதை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜி மற்றும் கிஷன் தாஸ் இருவரின் சிறு வயது கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் படத்திற்குள் நம்மை இழுத்துச் செல்ல பெரிதாகவே கைகொடுத்திருக்கிறார்கள்.

ஆர் ஜே பாலாஜியின் மாமாவாக வரும் சத்யராஜ், படத்திற்கு மிகப்பெரும் பலம். அவர் அடிக்கும் காமெடி கலாட்டாக்கள் படத்திற்கு பெரும் வலுவாக வந்து நிற்கிறது. முதல் பாதி அனைவரையும் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பலைகளை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் கருத்து சொல்கிறேன் என்று கூறி ஒரு லைனாக போகாமல் பல இடத்திற்குச் சென்று நம்மை சற்று சோதித்திருக்கிறார்கள்.

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலமாக நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

சிஜி காட்சிகள் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம்.

இரண்டாம் பாதியில் குறை இருந்தாலும், முதல் பாதி நிறைவாகவே உள்ளது.

சிங்கப்பூர் சலூன் – கலகலப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button