Spotlightசினிமா

எல் கே ஜி பெற்ற “யு”… வியக்க வைக்கும் எதிர்பார்ப்பு!

இயக்குனர் கே ஆர் பிரபு இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிக்க உருவாகியுள்ளது “எல் கே ஜி”. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்திற்கும் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்ட இப்படம் “யூ” சான்றிதழை பெற்றுள்ளது. இது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது.

ராம்குமார், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்து வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button