
பாகுபலி-2’ என்ற பிரம்மாண்டமான படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே ‘நடோடிகள்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ‘சம்போ சிவ சம்போ’ படத்தில் சமுத்திரக்கனி ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது ராஜமௌலி இயக்கும் ‘RRR’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு சமுத்திரக்கனிக்கு கிடைத்துள்ளது. ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.





