
தமிழகத்தில் யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதை மக்களும் காலமும் தான் தீர்மானிக்கும் என்று நடிகர் இயக்குனர், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசும் போது, ‘ தமிழகத்தில் இதுவரை முதல்வராக இருந்தவர்கள் பெரும்பாலும் சினிமாவை சார்ந்தவர்கள் தான். எம் ஜி ஆர் ஆட்சியில் இருக்கும் போது சினிமா வேறு அரசியல் வேறு என்பதில் தீர்க்கமாக இருந்து வந்தார்.
எம் ஜி ஆர் ஆட்சியில் இருக்கும் போது, அப்போது அமைச்சராக இருந்த ஒருவரை தாக்கி படம் எடுத்த என்னை அழைத்து பாராட்டினார். இப்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா..??
இவர் முதலமைச்சாராக இருந்தால் நல்லா இருக்குமே என்று மக்கள் நினைக்கும் போது, அதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. ’ என்று கூறியுள்ளார்.
பிகில் ஆடியோ விழா இன்று நடைபெறும் நிலையில் எஸ் ஏ சி’யின் இந்த பேச்சு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.





