
தமிழ் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு சென்று இந்திய சினிமாவை ஆட்டி படைத்தவர் நடிகை ஸ்ரீ தேவி. சில மாதங்களுக்கு முன் இவர் இயற்கை எய்தினார்.
இவருடைய மகள் ஜான்வி கபூர், அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
சமீபத்தில் டி வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேத்ரினாவிடம் நடிகைகள் ஜிம்மிற்கு உடை அணிந்து செல்லும் வரைமுறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கேத்ரினா, ‘ஜான்வி கபூர் அணிந்து வரும் குட்டையான உடைகளை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில்தான் உடற்பயிற்சி செய்கிறோம்.’ என்று பதிலளித்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Facebook Comments




