
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட ஜோடி என்றால் அது கவின் – லாஸ்லியா ஜோடி தான்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவர்களின் காதல் என்னவென்று அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.
வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவே இல்லை, அதற்கான புகைப்படமும் வெளிவரவில்லை. அப்படியென்றால், இவர்களின் காதல் முடிந்ததா என்ற கேள்வியெல்லாம் அவர்களது ரசிகர்களுக்குள் எழ ஆரம்பித்துவிட்டது..
அவர்கள் ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. லாஸ்லியாவின் தந்தை இருவரிடமும் நீங்கள் உண்மையாகவே காதலிக்கிறீர்கள் என்றால் ஒருவருடம் இருவரும் சந்தித்துக் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நாங்கள் உங்களது காதலுக்கு சம்மதம் தெரிவிப்போம். திருமணத்தைப் பற்றியும் நாம் பேசலாம். என்ற ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.
அதனாலேயே இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கிறார்களாம்.





