Spotlightசினிமாவிமர்சனங்கள்

டாடா – விமர்சனம் 4/5

யக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா, பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “டாடா”. டாடி என்று அழைக்காமல் மழலை டாடா என்று அழைப்பதால் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளனர்.

கதைப்படி,

நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட, அபர்ணா கர்ப்பமாகிறார்.

பெற்றோர்கள் வீட்டை விட்டு இருவரையும் வெளியேற்றி விடுவதால், தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட, குடிக்க ஆரம்பித்து விடுகிறார் கவின்.

இதனால் கவினுக்கும் அபர்ணாவிற்கு பிரச்சனை வர, வீட்டை விட்டு வெளியே சென்ற கவின் தனது செல்போனை அணைத்து வைத்து விடுகிறார். அச்சமயம் பார்த்து அபர்ணாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் அபர்ணாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அழகான ஆண்குழந்தை பிறக்க, குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு சென்று விடுகிறார் அபர்ணா.

கைக்குழந்தையோடு செய்வதறியாது நிற்கிறார் கவின். அபர்ணாவை தேடி அலைகிறார்.

அபர்ணா கிடைத்தாரா,..?? கவின் அபர்ணா இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கு பொருத்தமான நடிகராக கவின் தேர்ந்தெடுத்து நடிகராக இப்படத்தில் ஜொலித்திருக்கிறார். அபர்ணாவுடனான காதல் வாழ்க்கையாக இருக்கட்டும், குழந்தைக்கு தகப்பனாக வாழும் வாழ்க்கையாக இருக்கட்டும் ஒரு அனுபவ நடிகரின் நடிப்பைக் கொடுத்து கதைக்கு ஏற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நாயகனாக உருவெடுத்திருக்கிறார் கவின் என்று தான் கூற வேண்டும்.

நாயகியாக அபர்ணா, இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் இவர் தான், இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு அளவெடுத்து நடித்து அசத்தியிருக்கிறார் அபர்ணா.

விடிவி கணேஷின் எண்ட்ரீக்குப் பிறகு படத்தின் போக்கு கலகலப்பு ஏற்றி கதையின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

எமோஷன்ஸ், காதல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக வந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக வந்திருக்கிறது இந்த “டாடா”.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது அத்தி பூத்தாற் போல் வரும் லவ் டுடே பட வரிசையில் டாடா படமும் இணைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பாடல் , பின்னணி இசை இரண்டும் ஒருசேர கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென் மார்டின்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

டாடா – கொண்டாட வேண்டிய படைப்பு..

Facebook Comments

Related Articles

Back to top button