
SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். இதற்கு முன் பிரசாத் ஸ்டூடியோவில் இதன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது தனது வீட்டில் இந்த பணியை செய்து வருகிறார்.
அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.
Facebook Comments





