Spotlightவிமர்சனங்கள்

கூகுள் குட்டப்பா – விமர்சனம் 3/5

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இதன் தமிழ் ரீமேக்தான் இந்த கூகுள் குட்டப்பா

கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி,

கோயம்புத்தூரில் விவசாயம் செய்து வருகிறார் கே எஸ் ரவிக்குமார். இவரது மகனாக வருகிறார் தர்ஷன். தர்ஷன் சிறு வயதாக இருக்கும் போதே, தனது மனைவியை இழந்து விடுகிறார் கே எஸ் ரவிக்குமார்.

இயற்கை முறையிலேயே அனைத்தும் செய்து வருகிறார். தனது அப்பாவின் நிபந்தனையால் வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார் தர்ஷன்.

தனியாக இருக்கும் தனது அப்பாவை கவனித்துக் கொள்ளவும், உறுதுணையாக இருக்கவும் தனது நிறுவனம் கண்டுபிடித்த ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார்.

முதலில் ரோபோவை வெறுக்கும் கே அஸ் ரவிக்குமார், நாட்கள் செல்ல செல்ல அதனுடன் நட்பாகவும் அன்பாகவும் பழக ஆரம்பிக்கிறார். இன்னொரு மகனாக பாவித்து அதனுடன் பாசம் செலுத்தி வருகிறார் கே எஸ் ரவிக்குமார்.

ஒருகட்டத்தில், சோதனைக்காக அனுப்பப்பட்ட ரோபோவை கம்பெனிக்காரன் தர்ஷனிடம் திரும்ப கேட்க, தர மறுக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக வரும் கே எஸ் ரவிக்குமார் படத்தை தனி ஒருவராக சுமந்து செல்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதாலோ என்னவோ இவருக்கு வைக்கப்பட்ட காட்சிகள் ஏராளம். மற்ற நடிகர்களுக்கும் சற்று காட்சிகளை தூக்கலாகவே வைத்திருந்திருக்கலாம்.. ஆனால், தோன்றும் காட்சிகளில் ஆங்காங்கே ரசிக்கவும் வைத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

தர்ஷன் மற்றும் லோஸ்லியாவிற்கு போதுமான காட்சிகள் வைக்கப்படவில்லை என்றாலும், வைக்கப்பட்ட காட்சிகள் பளிச்சிடுகிறார்கள்.

யோகிபாபுவின் காமெடி பெரிதாக படத்தில் எடுபடவில்லை.

ரோபோவின் செயல்பாடுகள் குழந்தைகளை கவரும் என்றாலும், குழந்தைகளை முழுக்க முழுக்க கவரும் படம் என்றால் அது இல்லை..

சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது.

ஜிப்ரானின் இசை ஓகே ரகம் தான்… காட்சிக்கு நடுவே வந்த “ஆஹா மெல்ல நட மெல்ல உன் மேனி என்னாகும்..” பழைய பாடல் ரசிக்க வைத்தது.. அர்வியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்…

திரைக்கதையை ரசனையோடு கொடுத்ததற்காக இயக்குனர்களை பாராட்டலாம்…

கூகுள் குட்டப்பா – தியேட்டருக்கு குடும்பத்தோடு ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்….

Facebook Comments

Related Articles

Back to top button