
தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’.
இன்று இப்படம் மிகவும் அதிக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இப்படம் வெளியாகியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இதை காரணம் கொண்டு பல திரையரங்குகள் தங்களது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருச்சியில் உள்ள பிரபல திரையரங்கான LA சினிமாஸ் திரையரங்கில் பட டிக்கெட்டோடு சேர்த்து ஃபுட் கூப்பனும் விற்கப்படுகிறது.. 60 ரூபாய் மதிப்பு கொண்ட அக்கூப்பனையும் வாங்கிக் கொண்டால் மட்டுமே படத்தின் டிக்கெட் கொடுக்கப்படும் என வலுக்கட்டாயமாக கொடுத்திருக்கிறார்கள்..

பல திரையரங்குகளும் இதே போல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





