Spotlightசினிமா

மாமா விக்ரம பிடிக்கும் பட் நான் ’தல’ அஜித்தோட ஃபேன்… பப்ஜி ஹீரோ கலகல!

பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜுமன்.

சில தினங்களுக்கு முன் வெளியான பப்ஜி பட போஸ்டரில் இவரின் லுக் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுமனிடம் பேசிய போது, ‘ நான் சிறுவயதில் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். அப்போதே நடிப்பின் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

அப்பாவின் ஆசைப்படி வெளிநாடு சென்று பிசினஸ் மெனஜ்மெண்ட் படித்து, மீண்டும் சென்னை வந்தேன். அப்பாவிடம் கூறினேன், நடிக்கச் செல்கிறேன் என்று முதலில் தயங்கியவர் பின் வாழ்த்துகள் கூறி அனுப்பி வைத்தார்.

தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘பப்ஜி’ படத்தில் தான் நான் ஹீரோவாக நடித்து வருகிறேன்.

படத்தில் நடிக்கச் செல்கிறேன் என்று என் மாமா விக்ரமிடம் கூறியபோது என்னை வாழ்த்தி சினிமாவில் நீ நல்லா வருவ என்று என்னை வாழ்த்தி அனுப்பினார்.

வீட்டில் அம்மா, பாட்டி, அத்தை என அனைவருமே என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

மாமா விக்ரமை எனக்கு பிடிக்கும் பட் நான் தல அஜித்தோட ரசிகன். நடிகைகளில் சிம்ரன் எனக்கு ரொம்ப பிடிக்கும். ’ என்று கூறினார்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தளபதி விஜய்யின் ரசிகர் விக்ரமின் மருமகன் அர்ஜுமன் தல அஜித் ரசிகர்..  சூப்பரு

Facebook Comments

Related Articles

Back to top button