Spotlightசினிமா

முதல்வன் 2 படத்தில் விஜய் தான் என்னோட சாய்ஸ் – இயக்குனர் ஷங்கர்!

1999-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்க அர்ஜுன் நடிக்க வெளியானது ‘முதல்வன்’. மிகப்பெரும் வெற்றியடைந்த பெற்றது இப்படம்.

இதில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், ரகுவரன், வடிவேலு, விஜயக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 கடந்த மாதம் வெளியானது.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார் ஷங்கர். இந்த பேட்டியில் ”முதல்வன் 2” படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று பதில் அளித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button