Spotlightசினிமா

200 விருதுகளுக்கு மேல் குவித்த குறும்படம் சினிமாவாகிறது.. ஜுலை மாதம் படப்பிடிப்பு துவக்கம்!

யக்குனர் கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.

அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 200 விருதுகளுக்கு மேல் குவித்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது.

இக்குறும்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜி கே திருநாவுக்கரசு, சரவணன், மதியழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பலரும் இக்குறும்படம் இத்தனை விருதுகளுக்குமேல் இன்னும் பல விருதுகளை குவிக்க தகுதியான ஒன்று தான் என்று கூறினார்கள்.

அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை படம் எடுத்து இயக்குனர் கார்த்தி ராம் மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து கூறினர்.

பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும் இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும். இதை உரக்க சொன்ன இயக்குநர் கார்த்தி ராம் குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த நிலையில் ‘சிதை’ படத்தின் முதல் பாகத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் ஒளிப்பதிவாளர்- சுபாஷ் நாதன், எடிட்டர்- வினோத் சிவக்குமார், கே எம் கே ராதாகிருஷ்ணன், ஓரக்கிள் மூவிஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு இந்நிறுவனம் என்எஃப்டி பார்டனராக ஓரக்கிள் மூவிஸ் வந்திருந்து வாழ்த்தினர்.

படப்பூஜையன்றே ஓரக்கிள் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வாங்க முன்வந்துள்ளது.

ஜூலை மாதம் முதல் இதன் படப்பிடிப்பை 30 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button