Spotlightசினிமாதமிழ்நாடு

கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்.. எச்சரிக்கை!

மதுரை திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். எனவே, காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும் போது, பாதுகாப்பாக செல்லுங்கள் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை வரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button