
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது.
அரசும் தீவிர முயற்சி எடுத்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து சென்னை நிச்சயம் மீண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!” என்று கூறியுள்ளார்.
எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!💪
— Vivekh actor (@Actor_Vivek) June 15, 2020





