Spotlightசினிமா

ஆதேஷ் பாலா ஹீரோவாக நடிக்கும் செஞ்சி கோட்டை; தமிழ் சினிமாவில் தனி முத்திரையை பதிக்கும்!!

புதிய இளம் இயக்குனர் சந்தோஷ் நவீனின் இயக்கத்தில் பேட்டை, முண்டாசு பட்டி, ஆறு போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆதேஷ் பாலா முதல் முதலாக கதாநாயகனாக களமிறங்குகிறார். இப்படத்தில் இரட்டை கதா நாயகிகளாக அறிமுகமாகின்றனர் சொஹாணி விருபாக்‌ஷா மற்றும் நடிகை பிரியங்கா.

இப்படத்திற்கு செஞ்சி கோட்டை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காதல், பாசம், போராட்டம் என பல அம்சங்களை தழுவிய குடும்ப படம், பார்த்தால் பசு பாய்ந்தால் புலி கதாபாத்திர வேடம் ஏற்று அன்பை பொழிபவராகவும், அதே நேரத்தில் ஆக்ரோஷமும் ஆதங்கமும் வெளிப்படுத்தும் மனிதராகவும் ஆதேஷ் பாலா சிறப்பாக நடித்துள்ளார்.

கில்லி புகழ் அரிவாள் வீச்சு வில்லன் கராத்தே ராஜாவும் அதேஷ் பாலாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், பாசமிக்க தந்தையாக அறம் திரைப்பட புகழ் மகிமை ராஜும், வில்லியாக கவிதா விருபாக்‌ஷாவும், அறிமுக வில்லனாக ஷியாம் ஜீவாவும் நடித்துள்ளார்கள்.

இதில் வில்லி கவிதா விருபாக்‌ஷாவும் நாயகி சொஹாணி விருபாக்‌ஷாவும், நிஜ வாழ்க்கையில் தாயும் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிற அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர் சந்தோஷ் நவின்..

நிச்சயமாக இந்த படம் எந்தவொரு ஆபாசமின்றி குடும்பத்துடன் சென்று பார்க்கும்படி யதார்த்தமான நிகழ்வுகளை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது என்கிறார் இயக்குனர். செஞ்சி கோட்டை திரைப்படத்தில் நடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்பையும் அள்ளித்தரும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வெளிப்புற படக்காட்சிகள் செஞ்சியை அடுத்துள்ள பழைய சுரத்தூர் கிராமத்து மலைகளிலும், திருவண்ணாமலையில் நந்தி தீர்த்தம் மலை அடிவாரத்திலும் இதுவரை கண்டிராத கோணங்களில் கேமிரா கண்ணுக்கு விருந்து படைத்துள்ளது.

சண்டைக்காட்சிகள் நிச்சயம் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது. படத்தில் 3 பாடல்கள் உள்ளது. இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது.

கதானாயகனும் ஊர் பஞ்சாயத்து தலைவரும் மோதிக் கொள்ளும் காட்சியில் ஊர் மக்களும் மிக இயல்பாக நடித்து ஒரே டேக்கில் ஒகே ஆன காட்சி நிச்சயம் மக்களின் பாராட்டை பெறும் என்கிறது படக்குழு.

செஞ்சி கோட்டை திரைப்படத்தில் மைனா வெற்றி திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் கும்பிடுகுரு சாமியின் தீபாவளி வாழ்த்துக்கள் வெங்கைய்யா பாலனும் நட்புக்காக இணைந்துள்ளார்.

மேலும் மாஸ்டர் படத்தில் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனாக நடித்த ஆஜய்யும் மற்றும் அறிமுக நடிகைகள், பவுனம்பாள், ஸ்ரீஜோதி,மீனா ஜெயந்தாரா, நடிகர்கள் எஸ்.ரமேஷ் மற்றும் கேசவ் நடித்துள்ளார்கள்.. திரையுலகில் செஞ்சி கோட்டை நிச்சயம் தனது தனித்துவ முத்திரையை பதிக்கும்

Facebook Comments

Related Articles

Back to top button