Spotlightசினிமா

புஷ்பா 2′; வெளியானது அதிரடியான போஸ்டர்!

நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா’ படக்குழு #HuntForPushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ‘Pushpa 2: The Rule’ படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும், போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து அனைத்து எல்லைகளையும் உடைத்தது. ஒரு சாதாரண மனிதனை உலகளாவிய நாயகனாக இந்த கதை நிலை நிறுத்தியது. இப்போது, ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் இந்தியத் திரைப்படத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. #WhereIsPushpa? என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கான்செப்ட் வீடியோவின் க்ளிம்ப்ஸை தொடர்ந்து ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், ’புஷ்பா 2: தி ரூல்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் ’புஷ்பா: தி ரூல்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button